குஜராத் மாநிலம் வதோதராவில் 15 அடி நீளமுள்ள முதலை குடியிருப்பு பகுதியில் நுழைந்தது…!
குஜராத் மாநிலம் வதோதராவில் 15 அடி நீளமுள்ள முதலை குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. வதோதராவின் கம்நாத் நகரில் உள்ள விஸ்வம் ஆற்றில் வெள்ளப்பெருக்குக்கு ஏற்பட்டுள்ளதால் ஒரு வீட்டிற்குள் நுழைந்த 15 அடி ராட்சத முதலையை குடியிருப்பு வாசிகள் கண்டனர். வதோதராவில் உள்ள ஃபதேகுஞ்ச் பகுதிக்கு அருகில் உள்ள கம்நாத் நகரில் வசிப்பவர்கள் வியாழக்கிழமை காலை குடியிருப்பு பகுதியில் முதலையை கண்டனர்.ஒரு ராட்சத முதலை வெள்ள நீரில் தத்தளித்து, நகரின் விஸ்வாமித்ரி ஆற்றின் அருகே உள்ள காலனியில் ஒரு வீட்டை அடைந்தது. 15 அடி நீளமுள்ள முதலையை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, ஒரு வீட்டின் வாசலில் முதலை படுத்திருப்பதை கண்டனர். முதலை மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததால் தன்னார்வலர்கள் மீட்பு பணியை கவனமாக மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின் வனத்துறையினர் முதலையை மீட்டனர்.அதே பகுதியில் புதன்கிழமை இரவு வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த 11 அடி நீளமுள்ள முதலை மீட்கப்பட்டது. 300 முதலைகளுக்க மேல் வசிக்கும் விஸ்வாமித்ரி ஆற்றில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக நகரில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், இந்த முதலைகள் பல குடியிருப்பு பகுதிகளில் வலம் வருகின்றன.