ராமநாதபுரத்தில் நம்ம அண்ணாச்சி மக்கள் கழகம் சார்பில் இரத்த தான முகாம்…!
ராமநாதபுரத்தில் “நம்ம அண்ணாச்சி மக்கள் கழகம்” சார்பில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது…
ராமநாதபுரம்,ஜீலை.15:-
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாளையொட்டி நம்ம அண்ணாச்சி மக்கள் கழகம் சார்பில் மாபெரும் முதலாம் ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
நம்ம அண்ணாச்சி மக்கள் கழகம் நிறுவன தலைவர் எம்.கணேச மூர்த்தி ஆலோசனையின் பேரில் கிழக்கு ராமநாதபுரம் நாடார் உறவின் முறை சங்க தலைவர் எம்.பழனிச்சாமி நாடார், பொதுச்செயலாளர் எஸ்.நம்பு பிச்சை நாடார்,துணைப் பொதுச்செயலாளர் டி.உலகநாதன் நாடார்,நம்ம அண்ணாச்சி மக்கள் கழக மாவட்ட தலைவர் எஸ்.வெள்ளைச்சாமி நாடார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமிற்கு நாடார் மஹாஜன சங்கத்தின் முன்னாள் பள்ளிக்கல்வி இணைச்செயலாளரும்,அண்ணல் பாண்டியனார் நாடார் சங்கத்தின் பொருளாளருமான டி.மோகன் நாடார்,நாடார் மஹாஜன சங்க மாவட்ட செயலாளர் கே.குகன் நாடார்,நம்ம அண்ணாச்சி மக்கள் கழக மாவட்ட செயலாளர் எம்.ஜெயமுருகன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மண்டபம் ஒன்றிய தலைவர் பி.பாக்கியராஜ் நாடார் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக பனைகளின் இளவரசி வழக்கறிஞர் கவிதா காந்தி கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் நம்ம அண்ணாச்சி மக்கள் கழக நிர்வாகிகள் கீழக்கரை நகர் செயலாளர் லிங்கம் நாடார்,சத்தியராஜ்,ஆர்.சேதுபதி, பெருமாள்,முனியசாமி,மாரிமுத்து,ஆதி,ஜெயராமன்,எம்.எஸ்.முருகேசன்
அ.இ.அ.தி.மு. அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் சேது பாலசிங்கம், கும்பரம் கிளைச் செயலாளர் விஜயக்குமார் மற்றும் வெள்ளரி ஓடை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நரசிம்மன் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சதீஷ் நன்றி கூறினார்….