குற்றம்

சென்னை ரவுடிகளுக்கு செக்..!

சென்னையில் 6000 ரவுடிகளுக்கு செக்.! பட்டியல் தயார்.! யார் எங்கே இருக்காங்க.? கமிஷனர் அதிரடி ….!

தமிழகத்தில் தொடரும் கொலைகள்…!

தமிழகத்தில் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன….. போதை பொருட்கள் விநியோகமும் அதிகமாக இருப்பதால் இது போன்ற குற்ற சம்பவங்களில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. மேலும் திமுக அரசு சட்டம் ஒழுங்கை சரிவர கையாலவில்லையென விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக தமிழ்நாடு சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண் சென்னை பெருநகர காவல் ஆணையராக பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. பொறுப்பேற்ற முதல் வேளையாக செய்தியாளர்களை சந்தித்த அருண் ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்…. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பது, குற்ற நடமாட்டங்கள் தடுப்பது. நடந்த குற்றங்களின் ஈடுபட்டவர்களை கைது செய்வது மற்றும் ரவுடிகளுக்கு அவர்களுக்கு ஏற்ற மொழியில் பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு என பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 6000 குற்றவாளிகள் இருப்பிடத்திற்கு நேரில் சென்று அவர்கள் தற்பொழுது எங்கு வசிக்கிறார்கள்.
என்ன செய்து கொண்டுள்ளார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அப்படி அவர்கள் வசிக்கும் இடத்தில் வசிக்க வில்லை என்றால் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரங்களை சேகரிக்க வேண்டும் என கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். ரவுடிகள் கணக்கெடுக்கும் பணியானது அனைத்தும் துணை ஆணையர் நேரடியாக கண்காணிப்பில் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றவாளிகளுடன் தொடர்பில் உள்ள காவல் ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை தொடர்பில் உள்ளவர்களை உளவுத்துறை அவர்களுக்கு குறித்து தகவல் அளிக்க வேண்டும் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button