திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம்:-
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம்:-
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 12 காவல் வாகனங்கள் (08- இருசக்கர வாகனங்களும், 04 – நான்கு சக்கர வாகனங்களும்) உள்ளன. அந்த காவல் வாகனங்கள் தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வரும் 20.03.2025 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், நுழைவு கட்டணமாக ரூ.100/-ம், இருசக்கர வாகனத்திற்கு முன்பணமாக ரூ.500/-ம், நான்கு சக்கர வாகனத்திற்கு முன்பணமாக ரூ.1,000/-மும்,செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். 16.03.2025 முதல் 18.03.2025 ஆம் தேதி வரை காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை ஏலத்தில் கலந்து கொள்ள ரசீது வழங்கப்படும். மேலும், இருசக்கர வாகனம் ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையையும், ஏலத்தொகையுடன் 12% (GST) சரக்கு மற்றும் சேவை வரியும், நான்கு சக்கரவாகனம் எலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையையும், ஏலத்தொகையுடன் 18% (GST) சரக்கு மற்றும் சேவை வரியும், சேர்த்து உடனே பணம் செலுத்த வேண்டும். ஏலம் எடுத்த வாகனத்திற்கு உண்டான இரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும் . மேலும், எல ரசீது எந்த பெயரில் பெறப்படுகிறதோ அவரே ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் மற்றும் அவர் பெயரிலேயே வாகனத்திற்கு உண்டான உரிமை இரசீது வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு துணை காவல் கண்காணிப்பாளர், ஆயுதப்படை திருப்பத்தூர் மாவட்டம் அலுவலகத்தில் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் அலுவலக தொலைபேசி எண்: 9498186375.