கும்பகோணம் தீயணைப்பு வீரருக்கு பாராட்டு சான்று மற்றும் வெகுமதி அளிக்கப்பட்டது….
கும்பகோணம் தீயணைப்பு வீரருக்கு பாராட்டு சான்று மற்றும் வெகுமதி அளிக்கப்பட்டது….
கும்பகோணம் வட்டம் கருவளச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் முன்னாள் மாணவர் ராஜிவ் காந்தி தீயணைப்பு துறை வீரர் திருவிடைமதூர் மகாலிங்க சுவாமி தீர்த்தவாரி விழா நடைபெற்றபோது முருக்கங்குடி கிராமத்தைச் சார்ந்த முருகானந்த மகன் முரளிதரன் (13) ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கிவிட்டார்.அதுசமயம் ஆற்றில் குதித்து காப்பாற்றி செயலற்ற நிலையில் இருந்தவரை முதலுதவி செய்து சிறுவனின் உயிரை காப்பாற்றிய
தீயணைப்பு துறை வீரரை பாராட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் சான்றிதழும், வெகுமதியும் அளித்தார்… நிகழ்வை அறிந்த கருவளச்சேரி தலைமையாசிரியர் த.ஆரோக்கிய மேரி, நல்லாசிரியர் ப.அறிவுடை நம்பி ஆகியோர் தீயணைப்பு வீரரை கருவளச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்
பள்ளிக்கு வரவழைத்து நற்செயலை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்….
தலைமை செய்தியாளர் JDPN