Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடியில் சாலை விபத்தில் ஆம்பூர் நகர காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு..
திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடியில் சாலை விபத்தில் ஆம்பூர் நகர காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு..
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர், சித்தூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன் (39) ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார்..இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் காயத்ரி, ஜீவா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணி அளவில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் காவல் குடியிருப்புக்கு திரும்பி கொண்டு இருந்தபோது வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கு காவல்துறையினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி