நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகில் நெல்லை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் தேமுதிக கழக கொடி அறிமுக நாள் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது…
சேரன்மகாதேவியில் தேமுதிக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்…!
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகில் நெல்லை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் தேமுதிக கழக கொடி அறிமுக நாள் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது…
பொது கூட்டத்திற்கு தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் நலாயுதம் மற்றும் சேரன்மகாதேவி ஒன்றிய கழகச் செயலாளர்
ஆறுமுகதாஸ் ஆகியோர்
தலைமை தாங்கினார்கள்…
மாநில செயற்குழு உறுப்பினர் மாரியப்பன்,மாவட்ட மகளிரணி செயலாளர் விஜயசாந்தி,அம்பை ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன்,மாவட்ட சமுக வலைதள அணி துணை செயலாளர் குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்…
சேரன்மகாதேவி நகர கழக செயலாளர் சடகோபால் வரவேற்றுப் பேசினார்..
பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சமூக வலைதள அணி துணை செயலாளர் அரவிந்தன்,மாவட்ட கழக செயலாளர் விஜி வேலாயுதம்,மாவட்ட அவைத்தலைவர் விஜயகணேசன், தலைமை கழக பேச்சாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்…
பொதுக்கூட்டத்தில் வீ.கே புரம் நகர செயலாளர் இசக்கிராஜன்,கல்லிடைக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் நாலாயிரமுத்து, கோபாலசமுத்திரம் ராமசாமி,பத்தமடை கண்ணன்,பொட்டல் மாதவி,ஒன்றிய இளைஞரணி கசமுத்து உட்பட ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் கலந்துகொள்டார்கள்…
சுமார் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது…
நிகழ்ச்சி முடிவில் வீரவநல்லூர் பேரூர் கழக செயலாளர் ராமர் நன்றி கூறினார்…