திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிளை நூலகத்திற்கு இருபது ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கிய மெரினா புத்தக நிறுவனம்…!
திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிளை நூலகத்திற்கு இருபது ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கிய மெரினா புத்தக நிறுவனம்…!
பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிளை நூலகத்திற்கு மெரினா புத்தக நிறுவனம் ரூபாய் 20,000 மதிப்பிலான புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்கள்.நிகழ்ச்சிக்கு கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார், மாடப்பள்ளி கிளை நூலகர் அன்பழகன் அனைவரையும் வரவேற்றார். ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் வெங்கடேசன்,சுகந்தி சுரேஷ்,பேரரசன், ராம்குமார்,சதீஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்திய அஞ்சல் துறை ஜெயபிரதாஷ், திருப்பத்தூர் கலைத்தாய் கலைக்குழு தலைவர் சாமு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
மெரினா புத்தக நிறுவனத்தின் உரிமையாளர் தரணி, நிர்வாக இயக்குனர் கபிலன் ஆகியோர் முதல் நிலை நூலகர் பிரேமா பாரதியிடம் புத்தகங்களை வழங்கினர்.நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ் காந்தி