மறவர்பெருங்குடி அரசு_உயர்நிலைப்பள்ளியின்_அவலநிலை.. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், மறவர்பெருங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் தற்போது 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியானது கடந்த 2008 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 15 ஆண்டுகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற சிறப்பை இப்பள்ளி பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக இப்பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி முழுமையாக இடிந்துவிட்டது. இடிந்த சுற்றுச்சுவரின் ஒருபகுதி இன்றளவும் சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி சுற்றுச்சுவரின் பெரும்பாலான பகுதிகள் முழமையாக இடிந்துவிட்டது. தற்போது பள்ளியின் சுற்றுச்சுவர் முழுமையாக இடிந்துவிட்டதால் விடுமுறை தினங்களிலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. மேலும் பள்ளி வளாகத்தைச் சுற்றி முட்புதர்கள்,செடிகள், கொடிகள் வளர்ந்துள்ளதால் விஷப்பூச்சிகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் முட்புதர்கள், செடிகள், கொடிகள் வளர்ந்து முறையான விளையாட்டு மைதானம் இல்லாததால் பள்ளியில் கல்வி பயிலக்கூடிய சுற்றுவட்டார கிராமப்புற மாணவ மாணவிகள் தங்களது விளையாட்டுத் திறனை மேம்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை. தற்போது மாணவ மாணவிகள் பயன்படுத்தி வருகின்ற இரண்டு கழிப்பறைக் கட்டிடங்களும் முறையான பராமாிப்பும், பாதுகாப்புமின்றி சேதமடைந்துள்ளது. எனவே மறவர்பெருங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இடிந்த நிலையில் காணப்படுகின்ற சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு சுற்றுச்சுவர் அமைத்துத் தருவதற்கும், பள்ளியின் வளாகத்தைச் சுற்றி காணப்படுகின்ற முட்புதர்கள்,செடிகள், கொடிகள் போண்றவற்றை முழுமையாக அகற்றி விளையாட்டு மைதானம் அமைத்துத் தருவதற்கும், கழிப்பறைக் கட்டிடங்களில் போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுமா மாவட்ட நிர்வாகம்…
மறவர்பெருங்குடி அரசு_உயர்நிலைப்பள்ளியின்_அவலநிலை..
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், மறவர்பெருங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் தற்போது 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியானது கடந்த 2008 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 15 ஆண்டுகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற சிறப்பை இப்பள்ளி பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக இப்பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி முழுமையாக இடிந்துவிட்டது. இடிந்த சுற்றுச்சுவரின் ஒருபகுதி இன்றளவும் சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி சுற்றுச்சுவரின் பெரும்பாலான பகுதிகள் முழமையாக இடிந்துவிட்டது. தற்போது பள்ளியின் சுற்றுச்சுவர் முழுமையாக இடிந்துவிட்டதால் விடுமுறை தினங்களிலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. மேலும் பள்ளி வளாகத்தைச் சுற்றி முட்புதர்கள்,செடிகள், கொடிகள் வளர்ந்துள்ளதால் விஷப்பூச்சிகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது.
இப்பள்ளி வளாகத்தில் முட்புதர்கள், செடிகள், கொடிகள் வளர்ந்து முறையான விளையாட்டு மைதானம் இல்லாததால் பள்ளியில் கல்வி பயிலக்கூடிய சுற்றுவட்டார கிராமப்புற மாணவ மாணவிகள் தங்களது விளையாட்டுத் திறனை மேம்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை. தற்போது மாணவ மாணவிகள் பயன்படுத்தி வருகின்ற இரண்டு கழிப்பறைக் கட்டிடங்களும் முறையான பராமாிப்பும், பாதுகாப்புமின்றி சேதமடைந்துள்ளது.
எனவே மறவர்பெருங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இடிந்த நிலையில் காணப்படுகின்ற சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு சுற்றுச்சுவர் அமைத்துத் தருவதற்கும், பள்ளியின் வளாகத்தைச் சுற்றி காணப்படுகின்ற முட்புதர்கள்,செடிகள், கொடிகள் போண்றவற்றை முழுமையாக அகற்றி விளையாட்டு மைதானம் அமைத்துத் தருவதற்கும், கழிப்பறைக் கட்டிடங்களில் போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுமா மாவட்ட நிர்வாகம்…