அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் வரதராஜன்பேட்டை சிறப்பு பள்ளி/ முதியோர் இல்லத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
ஆண்டிமடம் ஒன்றியம் வரதராஜன்பேட்டை சிறப்பு பள்ளி/ முதியோர் இல்லத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் வரதராஜன்பேட்டை ஊராட்சியில் போக்குவரத்து துறை அமைச்சர்
எஸ்.எஸ்.சிவசங்கர் வழிகாட்டுதலின்படி ஆண்டிமடம் (வடக்கு) ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன் தலைமையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்” தினத்தில் ஆண்டிமடத்தில் செயல்படும் “அன்பகம்” சிறப்பு பள்ளியில் படிக்கும் (மாற்றுத்திறனாளிகள்) மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் உணவுகள் வழங்கினார்கள். அதனை தொடர்ந்து
வரதராஜன்பேட்டையில் செயல்படும் “ரபேல்” முதியோர் இல்லத்தில் உள்ள பயனாளிகளுக்கு இனிப்பு, உணவுகள் மற்றும் போர்வை, பாய், போன்ற பொருட்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் வரதராஜன்பேட்டை பேரூர் தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ் மற்றும் மாவட்ட ,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்….