திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உட்கோட்டம் மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோனேரி பட்டி ஒட்டன்சத்திரம் மெயின் ரோட்டில் டிரைவர் தோட்டத்தில் கடந்த 07.11.24 அன்று பகல் நேரத்தில் பூட்டிய வீட்டினை உடைத்து லேப் டாப் மற்றும் பணம் திருடு போனதாக கிடைக்க பெற்ற புகாரின் அடிப்படையில் மூலனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து லேப்டாப் மற்றும் பணம் மீட்கப்பட்டது….
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் உட்கோட்டம்
மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோனேரி பட்டி ஒட்டன்சத்திரம் மெயின் ரோட்டில் டிரைவர் தோட்டத்தில் கடந்த 07.11.24 அன்று பகல் நேரத்தில் பூட்டிய வீட்டினை உடைத்து லேப் டாப் மற்றும் பணம் திருடு போனதாக கிடைக்க பெற்ற புகாரின் அடிப்படையில் மூலனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது…திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்
மேற்பார்வையில்
மூலனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பீரித்திவி ராம் தலைமையில் தாராபுரம் உட்கோட்ட குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் கார்த்திக்,மதியழகன்,சதிஸ்குமார்,முதல்நிலைய காவலர் ராமர் ஆகியோர்களால் மேற்படி திருடு போன இடத்தில் கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து பார்த்ததில்
எதிரி கார்த்திக் (22)
த/பெ பெத்தையா
கட்டபொம்மன் நகர், தூத்துக்குடி மாவட்டம் என தெரியவந்தது…
கார்த்திக்கை விசாரித்ததில் குற்றத்தினை ஒப்புக்கொண்டார், களவு போன லேப் டாப் மற்றும் பணம்
மீட்கப்பட்டுள்ளது….