திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1கிலோ100 கிராம் கஞ்சா பறிமுதல் – உமராபாத் காவல் துறையினர் நடவடிக்கை….
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1கிலோ100 கிராம் கஞ்சா பறிமுதல் – உமராபாத் காவல் துறையினர் நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம் உமராபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட துதிப்பட்டு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.காவல்துறையினரின் சோதனையில் அதே பகுதியைச் சேர்ந்த 1.வெங்கடேஷ் (29), 2.ராஜேஷ் (25), 3.சதீஷ்குமார் (25) ஆகியோர் துதிப்பட்டு உப்பு காகிதம் கம்பெனியில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது…மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சுமார் 1கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.