குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் குழுவினர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தனர்…
குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் குழுவினர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.. இக்குழு பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டது.
முதல் கட்டமாக
ஆய்வு குழுவினர்கள் திருவள்ளுவர் சிலையில் நடைப்பெற்று வரும் கண்ணாடி இழை பால கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேங்கா பட்டணம் மீன்பிடித் துறைமுகம், நாகர்கோவில் மாநகர தண்ணீர் சுத்திகரிக்கும் நிலையம் உள்பட பல திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்…
உடன் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா,கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த்,கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார்,குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் ரெ. மகேஷ்,
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு,கன்னியாகுமரி பேரூராட்சி மன்ற தலைவர்,பேரூர் கழக செயலாளர் குமரி ஸ்டீபன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…