100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள் நான் இந்தியாவை வல்லரசாக்கி காட்டுகிறேன்!!!*
– சுவாமி விவேகானந்தர்
பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஆதர்சன நாயகர், வழிகாட்டி, எண்ணங்களின் சங்கமம் நிறுவனர் JP என்று அழைக்கபடும் பிரபாகரன் தம்பதிகள், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தனர்..
திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியின் சமூக பணித்துறை தலைவர் ஆண்ட்ரூஸ் ராஜா, AK மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலு, சீரங்கப்பட்டி சமூக ஆர்வலர் ராம்குமார், ஆலங்காயம் அரங்கபிரபு,பசுமை தாய்நாடு அறக்கட்டளை நிறுவனர் சத்யராஜ் உள்ளிட்டோர் வரவேற்று திருப்பத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி இருகின்ற உதவும் உள்ளங்கள் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார். இந்த நிகழ்வில் உதவும் உள்ளங்கள் நிறுவனர் ரமேஷ் அன்போடு வரவேற்று, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிக்கின்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று, அவர்களோடு உரையாடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். உண்மையில் இன்றைய காலகட்டத்தில் பெற்ற பிள்ளைகளே *தாய் தந்தையை* கைவிடுகின்ற இந்த சூழலில் *மனநலம் பாதிக்கப்பட்டவர்களை* அவ்வளவு அன்போடு *சுகாதாரமான உணவு, சுகாதாரமான இடம்* என்று தன்னுடைய *குழந்தைகளை பாதுகாப்பது போல்* பாதுகாக்கின்ற உள்ளங்கள் ரமேஷ் ஒரு *அன்னை தெரேசாவாகவே* எங்களுக்கு தெரிந்தார். நெஞ்சம் கனத்தது ஆனாலும் அவர் இன்முகத்தோடு அந்த பணிகளை செய்து வருவது திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்..உதவும் உள்ளங்கள் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி 15 ஆண்டுகளுக்கு முன்பாக வருகை தந்ததை பற்றிய நினைவுகளை JP பகிர்ந்து கொண்டது உண்மையில் மகிழ்ச்சி நீண்ட நேரம் உரையாடுவதற்கு ஆசைகள் இருந்தாலும், அவருடைய பயணங்கள் இன்னும் நீண்ட பயணங்கள் தொடர வேண்டும் என்பதினாலும்… அவரிடமிருந்து பிரியா விடைபெற்ற அந்த சமயத்தில் இயற்கை கூட பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்ததோ என்று மழையின் தூறலோடு விடைபெற்ற அந்த தருணம்… இன்னும் எங்களுக்கு பசுமையாக காட்சியளிக்கிறது. எங்களுடைய மாவட்டத்துக்கு வருகை தந்த சிறப்பித்த தம்பதிகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி…