விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகில் மறையூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான மதுரையை ஆட்சி செய்த அரசி ராணி மங்கம்மாவால் கட்டப்பட்ட பழமையான அன்ன சத்திரத்தை மீட்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகில் மறையூர் என்ற கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மதுரையை ஆட்சி செய்த அரசி ராணி மங்கம்மாவால் கட்டப்பட்ட பழமையான அன்ன சத்திரம் ஒன்று உள்ளது.
இந்த அன்ன சத்திரத்தில் தினமும் பாதசாரிகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.. இராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கு இது ஒரு வழிப்போக்கு மண்டபமாகவும், உணவு கொடுக்கும் சத்திரமாகவும் இருந்துள்ளது.
24 மணி நேரமும் அன்னமிடும் சத்திரமாக இது இருந்துள்ளது,ராணி மங்கம்மாவுக்கு பிறகு மருது பாண்டியர்கள் இந்த சத்திரத்தை பாதுகாத்து வந்துள்ளனர்..மேலும் இந்த சத்திரத்திற்கு நிறைய திருப்பணிகளும் செய்துள்ளனர்.
இந்த சத்திரத்தில் முன்னொரு காலத்தில் மிகப்பெரிய சுரங்கம் ஒன்று இருந்துள்ளது.. இந்த சுரங்கம் இந்த இடத்திலிருந்து மதுரை வரை செல்லக்கூடிய சுரங்கமாக இருந்துள்ளது. இன்றும் இந்த சுரங்கம் இருந்த இடத்தை நம்மால் பார்க்க முடிகிறது.
300 ஆண்டுகள் பழமையான இந்த சத்திரம் தற்போது மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது.. கிட்டத்தட்ட அழிந்த நிலையில் உள்ள சத்திரமாக உள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியர் முன் வந்து தொல்லியல் துறை மூலமாக நடவடிக்கை எடுத்து இந்த பழமை மிகுந்த சத்திரத்தை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…