அரசியல்உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சி 14-வது வார்டு வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் அருகே நடைபெறும் வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் பார்வையிட்டார்…!

நாகர்கோவில் மாநகராட்சி 14-வது வார்டு வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் சஹானா ஹோட்டல் அருகில் ₹5.80 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பக்க சுவர் அமைக்கும் பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தார்.பின்பு வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் உள்ள நவீன கழிப்பறையில் சிறுநீர் கோப்பைகள் மற்றும் தண்ணீர் குழாய் உடைந்து இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அதனை உடனே சரிசெய்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்…மேலும் பேருந்து நிலையத்தின் வெளியே உள்ள கடைகாரர்கள் பொருட்களை நடைபாதையில் வைத்து இருந்தனர் அதனை உடனே
அகற்றி கடையின் உட்பகுதியில் வைத்திடும் படி அறிவுருத்தினார்.

  1. உடன் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா,உதவி செயற்பொறியாளர் ரகுராமன்,மாநகர் நல அலுவலர் ராம்குமார், மண்டல தலைவர் ஜவஹர்,மாமன்ற உறுப்பினர் கலாராணி, தொழில்நுட்ப அலுவலர் பாஸ்கர், சுகாதார அலுவலர் ராஜராம்,திமுக மாநகர செயலாளர் ஆனந்த், துணைச் செயலாளர் வேல்முருகன், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், மாநகர இளைஞர் அணி சி.டி.சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button