தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…!
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து நிலைப் பணியாளர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை:;
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றம் ஆசிரியர் பயிற்றுநர்கள்,பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள்,கணினி வகைப்படுத்துபவர்கள்,கணக்காளர்கள், பொறியாளர்கள், கணினி விவர பதிவாளர்கள்,கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர்கள்,பகல் நேரப் பாதுகாப்பு சிறப்பாசிரியர்கள், உதவியாளர்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் முன்பருவ கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும்.மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 60 சதவிகிதம் நிதியை உடனடியாக வழங்கி மாணவர் நலன் கருதியும் அரசு பணியாளர்கள் நலன் கருதியும் அரசை வலியுறுத்தி இனிவருங் காலங்களில் ஒவ்வொரு மாதமும் கடைசி தேதியில் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் காலதாமதம் இன்றி வழங்குமாறு முன் னேற்பாடுகளை மாநில அரசு செய்ய வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இங்கனம் தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள்
சங்கம்,திருவண்ணாமலை…
செய்தியாளர்
சீனன்