உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் ₹ 7 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்…

நாகர்கோவில் மாநகராட்சியில் ₹ 7 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.
நாகர்கோவில் மாநகராட்சி
48-வது வார்டுக்குட்பட்ட வெள்ளாடிச்சி விளை பகுதியில் ₹2 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பக்கசுவர் அமைக்கும் பணி.

27-வது வார்டுக்குட்பட்ட வடிவீஸ்வரம் மேல பள்ளத்தெருவில் ₹5 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும்
பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்.

உடன் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா,மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி,மாமன்ற உறுப்பினர்கள் பியாஷா ஹாஜிபாபு, கோபால சுப்பிரமணியன்,இளநிலை பொறியாளர் செல்வன் ஜார்ஜ்,மாநகர செயலாளர் ஆனந்த்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவன்,பகுதி செயலாளர் துரை,அணி நிர்வாகிகள் அருண்காந்த்,சிதம்பரம், வட்டச்செயலாளர் அன்சாரி,கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டார்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button