அரசியல்

திமுக வோடு நிலையான கூட்டணியில் இருப்பதால் விஜய் குறிந்த சிந்தனையே இல்லை – துரை வைகோ பேட்டி..!

திமுக வோடு நிலையான கூட்டணியில் இருப்பதால் விஜய் குறிந்த சிந்தனையே இல்லை –
துரை வைகோ பேட்டி.

மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்திற்கான 1923_24ம் ஆண்டிற்கான கல்வி நிதி ரூ. 2,249 கோடி பாக்கி வைத்துள்ள நிலையில். இவ்வாண்டு ஜூன் மாதத்திற்குள் தரவேண்டிய ரூ.500.00 கோடியை தராது காலம் தாழ்த்துவதால், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் 15,000 ம் பேருக்கு மாத ஊதியம் கொடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானை, தமிழக கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உடன் சென்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து மனு கொடுத்தோம். மாணவர்களின்,ஆசிரியர்களுக்கான இந்த நிதி குறித்து, மத்திய கல்வி அமைச்சரிடம் கனிமொழி,விசி.க அமைப்பின் தலைவர் திருமாவளவன் எடுத்து தெரிவித்தார்கள்.

மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்த பதிலில் தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து தமிழகம் கையெழுத்து இட்டால் நிதியை உடனே அனுமதிக்கிறோம் என்று தெரிவித்தார். இது குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ள கருத்து இரண்டு திட்டங்களும் வேறுபாடுகள் உள்ளன. மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை, தமிழகத்தை போன்று வேறு 5 மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தெளிவு படுத்தியுள்ளார்.

அண்மையில் பழனியில் நடந்த முத்தமிழ் முருகன் தமிழ் கடவுள் என்ற விழாவை நான் வரவேற்கிறேன். அது ஒரு கலாச்சார விழா. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இது மதம் சார்ந்த விழா அல்ல… சகோதர மதங்களில் ரம்சான் நோம்பு, கிறிஸ்துமஸ் விழாவின் போது கேக் வெட்டுவது போன்று எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ள விழா போன்றது… பழனியில் நடந்த முருகன் முத்தமிழ் விழா ஒரு குறிப்பிட்ட இயக்கம் இந்து மதத்தினை சொந்தம் கொண்டாடுவதை இந்த விழா உடைந்துள்ளது.
இரயில்வே திட்டங்களுக்கு முழுமையான நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கவில்லை.12 ஆண்டு களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கூட கிடப்பில் கிடக்கிறது… இதேபோல் மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் நிதி பங்களிப்பு இல்லை. பல்வேறு சிரமங்களுக்கு இடையே தான் மெட்ரோ ரயில் பணி நடைபெறுகிறது.தற்போது பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணியால் சிரமம் ஏற்பட்டுள்ளது..நடிகர் விஜய்யின் புதிய கட்சி தொடக்கத்தை வரவேற்கிறேன்.நாங்கள் விஜய்யின் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வி வேண்டாம்..தி.மு.க தலைமையில் ஏற்கனவே நாங்கள் உறுதியான கூட்டணியில் இருக்கிறோம்.. அவர்கள் கொள்கையை மாநாட்டில் தான் அறிவிக்க போவதாக சொன்னார்கள். என துரை வைகோ எம்பி குறிப்பிட்டார்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button