கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் பிஸ்மி அகாடமி மாணவர்கள் அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவினை கார்குழலி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ராசு தாமோதரன் வழங்கினார்..
கள்ளக்குறிச்சி மாவட்டம்
சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் பிஸ்மி அகாடமி மாணவர்கள் அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவினை கார்குழலி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ராசு தாமோதரன் தலைமை ஏற்று நடத்தினார்…நிகழ்ச்சியில் பிஸ்மி அகாடமி நிறுவனர் ஷா இனாயத்துல்லா அனைவரையும் வரவேற்று பேசினார்.சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் ஆறு.கதிரவன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி அறியாமையை நீக்கி முயற்சி தான் என்றும் வெற்றி தரும் என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியில் ஆமினா பெண்கள் நல வாழ்வு அறக்கட்டளை செயலாளர் இதயத்துல்லா, அ.பாண்டலம்ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி நடராஜன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சசிகுமார், தேவபாண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் அருள் ஜோதி, லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலு,ஸ்டார் கிளப் மாவட்ட தலைவர் முகமது ரபி,ஸ்டார் கிளப்பின் நகரத் தலைவர் நூர்தீன்,கவிஞர் கோவிந்தன், தமிழ் படைப்பாளர் சங்க துணை தலைவர் சக்திவேல், பாண்டலம் லன்ஸ் கிளப் நகரத் தலைவர் குமார்,கவிஞர் வெண்ணிலா, கவிதா சீனுவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவர்களைபாராட்டி வாழ்த்தி பேசினார்கள்.. உடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்..நிகழ்ச்சியின் இறுதியில் கார்குழலி கல்வி அறக்கட்டளையின் செயலாளர் வசந்தா கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்….