திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பொது நூலகம் சார்பில் அரசு தேர்வு group1,1A, 2, 2A, 4 மற்றும் ரயில்வே துறை, பொதுத்துறை வங்கி தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் நூலகம் மற்றும் இலவசமாக பயிற்சி வகுப்புகளை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்…
தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவசௌந்தரவள்ளி தலைமையில் நடைபெற்ற விழாவில்
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு வகுப்பினை தொடங்கி வைத்தார்.
உடன் மாவட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், திருப்பத்தூர் நகர மன்ற செயலாளர் எஸ்.ராஜேந்திரன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட நூலக அலுவலர் கிளைமேன்டு, ரெட் கிராஸ் சேர்மன் கிஷோர் பிரசாத், மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
செய்தியாளர்
சாமுவேல்