திருப்பத்தூர் மாவட்டம் :: இந்தியாவின் 76 வது குடியரசு நாளை கொண்டாடும் இந்நாளில் அரசியல் அமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அம்பேத்கரின் பெயரால் அச்சட்டத்தை பாதுகாத்திட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆணைக்கிணங்க திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர விடுதலை சிறுத்தைகள் சார்பாக நகர செயலாளர் ஆனந்தன் மற்றும் அ.சு.பழனி ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்திய பின்பு அரசியல் அமைப்பு சாசன பாதுகாப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது….
திருப்பத்தூர் மாவட்டம் ::
இந்தியாவின் 76 வது குடியரசு நாளை கொண்டாடும் இந்நாளில் அரசியல் அமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அம்பேத்கரின் பெயரால் அச்சட்டத்தை பாதுகாத்திட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆணைக்கிணங்க திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர விடுதலை சிறுத்தைகள் சார்பாக நகர செயலாளர் ஆனந்தன் மற்றும் அ.சு.பழனி ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்திய பின்பு அரசியல் அமைப்பு சாசன பாதுகாப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் ஜெ.சம்பத், திருப்பத்தூர் தொகுதி துணை செயலாளர் த.நந்தன், ஜோலார்பேட்டை ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ஜே.டி.சம்பத்ராஜ்,திருப்பத்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கு.ரங்கன், நாட்றம்பள்ளி ஒன்றிய துணை செயலாளர் சௌந்தரராஜன், கந்திலி ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் அன்பரசு மற்றும் முன்னாள் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள், முகாம் பொறுப்பாளர்கள் என ஏராளமான முக்கிய வி.சி.க நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பு சாசன உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்…