கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் புத்தக நாள் விழா மாவட்ட நூலக அலுவலர் முருகன் தலைமையில் நடைபெற்றது…
கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் புத்தக நாள் விழா மாவட்ட நூலக அலுவலர் முருகன் தலைமையில் நடைபெற்றது…
மைய நூலகர் ஆனந்த கணேசன் அனைவரையும் வரவேற்றார்.. விழாவில் வண்டியம்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி மாணவிகளால் எழுதப்பட்ட “பொரி உருண்டை” மற்றும் “முட்டை மிட்டாய்” ஆகிய புத்தகங்கள் அனைவரது பாராட்டையும் பெற்றது… விழாவில் வாசகர் வட்ட தலைவரும் ,உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவருமான தமிழ் அரிமா பா.மொ.பாஸ்கரன் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்… நிகழ்ச்சியில் கௌரவத் தலைவர் தங்க சுதர்சனம் அருள்ஜோதி தலைமை ஆசிரியர்கள் ஜாக்குலின் மற்றும் அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்… நூலகப் பணியாளர்கள் கல்பனா ,இந்திரா காந்தி ,பற்குணன், சண்முகசுந்தரம், குமுதம் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்… நிகழ்ச்சி முடிவில் நூலக பணியாளர் ஆறுமுகம் நன்றியுரையாற்றினார்…
தலைமை செய்தியாளர்
R.S.தாமோதரன்