திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை…!
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் 01.10.2024 துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழு அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் ஜீவா நகர் பகுதியில் ஷாஹீன் (38) நடத்தி வந்த பெட்டிக் கடையில் சோதனை செய்ததில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 6 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்…
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தல்,வங்கிக் கணக்கை முடக்குதல், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துதல், போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல்,விற்பனை குறித்த தகவல்களை 91599 59919 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவித்து போதை பொருள் இல்லாத மாவட்டத்தை உருவாக்க காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தகவல் கொடுப்போரின் விவரம் பாதுகாக்கப்படும். மேலும் போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்….
செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி