தஞ்சை அரசர் அரசு உதவிபெறும் பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம் நடைபெற்றது…
தஞ்சை அரசர் அரசு உதவிபெறும் பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம் நடைபெற்றது…
தஞ்சை அரசர் அரசு உதவி பெறும் பள்ளியில் 104 ஆம் ஆண்டுவிழா, விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா, புதிய மாணவர் சேர்க்கை விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி நிர்வாக குழு செயலர்
வ.செ.சக்திவேல் தலைமையில், வட்டார கல்வி அலுவலர் சீ.அம்பிகா, வட்டார வள மைய மேர்பார்வையாளர் ஜெனட் ஷோபா முன்னிலையில், அரசர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கண்ணம்மா, அபூர்வா அறக்கட்டளை நிறுவனர்
அ.சந்தனசாமி, பெற்றோர் ஆசிரிய சங்க தலைவர்
மீ.அசோக் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பள்ளியின் ஆசிரியை ரா.தாமரைச்செல்வி அனைவரையும் வரவேற்க, தலைமையாசிரியர் மீ.குமார் ஆண்டறிக்கை வாசிக்க, சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.புதிய மாணவர்கள் அனைவருக்கும் மாலை அணிவத்து புத்தகப்பை, சிலேட் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது, வில்வித்தையில் தங்க பதக்கம் வென்ற மாணவன் சாய்சரணுக்கு மாலை அணிவித்து பரிசுகள் வழங்கி கொளவிக்கப்பட்டது. விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று வெற்றிப் பெற்ற பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேடையில் அனைவரும் அசத்தும் வகையில் மாணவர்கள் நடனம் ஆடி அசத்தினர். கராத்தே மாணவர்கள் பல சாகசங்களை செய்துக் காட்டியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. நிகழ்சிகளை ஆசிரியை திருமதி சு.விமலா தொகுத்து வழங்கினர். அனைத்து ஆசிரியர்களும் இணைந்து விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர்…
தலைமை செய்தியாளர்
JDPN