Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொளிஞ்சிவாடி வாய்க்கால் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத மின் இணைப்பு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது…

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்
கொளிஞ்சிவாடி வாய்க்கால் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத மின் இணைப்பு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது…

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்
கொளிஞ்சிவாடி வாய்க்கால் நீர் பாசன கவுர் சர்வே நம்பர் 141/1, 142/2 அரசு பொதுக் கவுரை ஆக்கிரமிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த கவுறு வழியாக சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களுக்கு தண்ணீர் செல்ல விடாமல் வேண்டுமென்று கவர் மடைகளை அழித்து ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்வதை தடை செய்து வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் அமராவதி ஆற்றோரம் சுமார் 50 அடி தொலைவில் அரசுக்கு சொந்தமான பாதி இடத்தில் கிணறு தோண்டி அதற்கு இலவச மின்சாரம் முறையற்ற முறையில் பெற்று , சட்டத்துக்கு விரோதமாக இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

இவைகளை கண்காணித்து சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் மற்றும் அமராவதி வடிகால் நீர் பாசன துறையின் அதிகாரிகள் ஆய்வு செய்து மேற்படி தாழ்த்தப்பட்டோருக்கு சொந்தமான வயல்வெளிகளுக்கு அரசு மூலமாக போடப்பட்ட நீர்ப்பாசன பொதுக்கவுரை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு கொடுத்து விவசாயம் செய்வதற்கு வழிவகை செய்திட வேண்டும்.

அதேபோல அரசு விதிகளை மீறி அமராவதி ஆற்றில் இருந்து சுமார் 50 அடி தொலைவில் தோண்டப்பட்ட கிணறுக்கு இலவச மின்சாரத்தை முறையற்ற முறையில் பெற்றுள்ளதை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுமாறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் விவசாயிகளின் சார்பிலும் தாராபுரம் வட்டாட்சியரிடம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்ததின் அடிப்படையில் 04/04/2025; நீர்வளத் துறை அதிகாரிகள் நேரில் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய விசாரணை செய்து அரசுக்கு சொந்தமான வாய்க்கால் நீர்ப்பாசன பொதுக் கவுரை ஆக்கிரமிப்பாளர் களிடமிருந்து எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு மாமூலாக தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் , அதே சமயம் அமராவதி ஆற்றில் இருந்து 50 அடி தொலைவில் உள்ள கிணற்றுக்கு இலவச மின்சாரத்தை தவறுதலாக பயன்படுத்தி மின் இணைப்பு பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இது குறித்து நாங்கள் புகார் கொடுத்து அதற்குண்டான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிச் சென்றுள்ளனர்.

ஆகவே ,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களின் விவசாய பூமிக்கு வரக்கூடிய தண்ணீரை வேண்டுமென்றே தடுப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயலாகும், அதேசமயம் ஒரு தாழ்த்தப்பட்டோருக்கு ஏற்படும் தீண்டாமை வன்கொடுமையாகவும் கருதுவதால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்நிகழ்வில் மேனாள் மாவட்ட செயலாளர்
நா. தமிழ்முத்து ,
நகர பொருளாளர் கரிகாலன், அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் காங்கேயம் கிளைச் செயலாளர் சங்கிலி ராம், திராவிட கழக பொதுக்குழு உறுப்பினர் தோழர் வழக்கறிஞர் சக்திவேல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொறுப்பாளர் ரீத் குமார் நகர பொறுப்பாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்…

செய்தியாளர்

அன்பழகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button