திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமையில் நடைபெற்றது…
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமையில் நடைபெற்றது…
திருப்பூர் மாவட்டம்
தாராபுரத்தில் மாதாந்திர கூட்டம் நகராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது…கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமையில் நடைபெற்றது… நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் முன்னிலை வகித்தார்… கூட்டத்தில் குடிநீர் பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல், புதிய மோட்டார் பொறுத்துதல், மோட்டார் பழுதுபார்த்தல் உட்பட பல்வேறு பணிகளுக்காக ரூபாய் 1 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்குதல்,
கூடுதலாக அளவீடு செய்து சொத்துவரி விதிக்கப்பட்ட நகராட்சிக்கு உட்பட்ட வீடுகளுக்கு சரியான அளவு செய்து சொத்து வரி விதிக்க அனுமதி கோருதல்,
சாக்கடை கால்வாய்களை தூர்வார மினி ஜேசிபி இயந்திரங்களுக்கு அனுமதி கோருதல் உட்பட 84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அனைத்து நகரமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அன்பழகன்