கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஒருகால் துண்டான நிலையில் இளைஞர் சடலம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஒருகால் துண்டான நிலையில் இளைஞர் சடலம்…
சேலத்தில் இருந்து நேற்று இரவு சென்னை சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே காவல்துறையினர் விசாரணை…!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ரயில் நிலையம் எதிரே உள்ள தெற்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (24). திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கார்த்திகேயனின் உடல் இன்று காலை சின்னசேலம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் ஒரு கால் துண்டான நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் ரயில்வே போலீசார் இறந்து போன கார்த்திகேயனின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த இளைஞர் நேற்று இரவு சேலத்தில் இருந்து சென்னை மார்க்கமாக சென்ற ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….
செய்தியாளர்
K. முருகன்