கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் வார்டு எண் 1 கீழக்கோட்டையூர் நடுநிலைப் பள்ளியில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் வார்டு எண் 1 கீழக்கோட்டையூர் நடுநிலைப் பள்ளியில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்
பந்துமுனை பேனாக்கள் மக்காமல் மண்வளத்தை பாதிப்படைய செய்கிறது.மேலும் பறவைகள் விலங்குகளுக்கு தீங்கினை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பந்து முனை பேனாக்களில் இருந்து வெளிவரும் ரசாயனத்தின் நச்சுத்தன்மையால் இயற்கை வளங்கள் பாதிப்படைகின்றன. ஆகையால் இப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியக்கூடிய பேனாவிற்கு பதிலாக மறுபடி பயன்படுத்தக்கூடிய மையூற்று பேனா வழங்கும் நிகழ்வானது (03-03-25) அன்று மாநகராட்சி ஆணையர் கா.பாலு மற்றும் மாநகர் நல அலுவலர் மருத்துவர் தி.திவ்யா தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஆணையர் கலந்து கொண்டு பேசுகையில் நெகிழி பொருட்களை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நாம் அன்றாடம் பயன்படுத்தும்
பந்துமுனை பேனா நெகிழியால் தயாரிக்கப்பட்டது
.இதை நாம் பயன்படுத்தி எரித்த பிறகு மண்ணுக்குள் மக்காமல் கிடக்கும்.இதை சுழற்சி செய்வது மிகவும் சிரமமானது. எனவே மாணவர்கள் பந்து முனை பேனாக்களை பயன்படுத்துவதை தவிர்த்து மையூற்று பேனாக்களை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் 150
க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பேனாவிற்கு பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய மையூற்று பேனாவினை பெற்றுக்கொண்டனர்.மேலும் நிகழ்ச்சியை மாநகர நல அலுவலர் தி.திவ்யா,சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் இருதயதனராஜ், பள்ளிஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தலைமை செய்தியாளர்
JDPN