Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்பாட்டம்…!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்பாட்டம்…!

ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட கோரி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது….ஆர்பாட்டத்திற்கு ஜாக்டோ – ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவருமான
அ.ஆரோக்கியராசு தலைமை வகித்தார். ஆலங்குளம் வட்ட ஊரகவளர்ச்சி துறை செயலர் அன்பரசு முன்னிலை வகித்தார். ஆலங்குளம் வட்ட அரசு ஊழியர் சங்க துணை செயலர் சிலம்பரசன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆர்பாட்டத்தில் 01.04.2003 க்கு பின் நியமனம் பெற்ற அனைத்து தமிழக அரசு அலுவலர் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பை ஊதியமாக்கிட ஆணை வழங்க வேண்டும்.,அரசு அலுவலர்கள் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை அரசு வழங்கிட வேண்டும்…21 மாத ஊதிய நிலுவைத் தொகையை அனைத்து அரசு அலுவலர் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். 2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த அரசு அலுவலர் ஆசிரியர்களுக்கு நியமன காலம் முதல் பணி வரண்படுத்த வேண்டும். அரசு அலுவலகம் மற்றும் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள அனைத்து காலி பணியிடங்களையும் உடனே நிரப்பிட வேண்டும்…தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீத ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243 ஐ ரத்து செய்திட வேண்டும்… சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர் முதல் எம்.ஆர்.பி செவிலியர் வரை அனைவருக்கும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிவரண் படுத்திட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலங்குளம் வட்டார செயலாளர் பவுல் அந்தோணிராஜ், ஆலங்குளம் வட்ட வருவாய்துறை வட்டாட்சியர்
அலுவலர் சங்க ஞானசேகரன் , வருவாய் அலுவலர் சங்க வசந்தகுமார்,
சத்துணவு அமைப்பாளர் சாந்தி, தென்காசி மாவட்ட அரசு ஊழியர் சங்க இணை செயலர், மக்கள் நலப்பணியாளர் புதியவன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இறுதியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற ஆலங்குளம் வட்டார செயலாளர் ராஜா நன்றி கூறினார்.
ஆர்பாட்டத்தில் ஏராளமான அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அடுத்த கட்டமாக தென்காசி மாவட்ட தலைநகரில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் ஆலங்குளம் வட்டாரம் சார்பில் பெருந்திரளாய் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button