Uncategorizedஉள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் அருகிலுள்ள மண்டபத்தில் இந்திய வீரக்கலை சங்கம் சார்பில் 250 கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு 8 ம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது…
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் அருகிலுள்ள மண்டபத்தில் இந்திய வீரக்கலை சங்கம் சார்பில் 250 கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு 8 ம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்
தென்காசி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், பூலான்குளம், ஏபிஎன், வள்ளியம்மாள்புரம், மைலப்பபுரம், ஆவுடையானுர், அழக பெருமாளூர், புளியங்குடி, கோவிந்தபேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வீரக்கலை மாணவ,மாணவியர் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர்.
சிலம்ப போட்டிக்கு இந்திய வீரக் கலை சங்க தலைவர் R.B.சேகர் தலைமை தாங்கினார்,தெட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாசன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீரக்கலை ஆசிரியர் ஹரிஹரன் சிறப்பாக செய்திருந்தார்…
செய்தியாளர் சங்கரசுப்பிரமணியன்