Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், வெள்ளியணை காவல் நிலைய சரகம், மணவாடி கிராமத்தில் கடந்த 2020 ஆம் வருடம் இடப்பிரச்சனை தொடர்பாக நடந்த இரட்டை கொலை சம்பவத்திற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யபட்டு சிறையில் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது…

கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், வெள்ளியணை காவல் நிலைய சரகம், மணவாடி கிராமத்தில் கடந்த 2020 ஆம் வருடம் இடப்பிரச்சனை தொடர்பாக நடந்த இரட்டை கொலை சம்பவத்திற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு ராயனூர், தில்லை நகரை சேர்ந்த அண்ணன் தம்பிகளனான எதிரிகள் 1) பார்த்தீபன், 31/25, த/பெ தேவராஜ், 2) கௌதம், 30/25, த/பெ தேவராஜ் மற்றும் 3) பிரவீன் (எ) வெங்கடேஷ், 29/25, த/பெ.தேவராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை செய்து, எதிரிகள் பார்த்தீபன் மற்றும் கௌதம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மூன்றாவது எதிரியான பிரவீன் (எ) வெங்கடேஷ் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 02 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் கரூர் அமர்வு நீதிமன்றத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட குற்றவாளியாக (Proclaimed Offender) பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையிலான கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவினர் (Anti Rowdy Team) 07.02.2025 ஆம் தேதி தலைமறைவு எதிரியான பிரவீன் (எ) வெங்கடேஷ் – திருச்சியில் கைது செய்து,இன்று 08.02.2025 ஆம் தேதி கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1 முன்பு அஜர்படுத்தி நீதிமன்ற காவல் அடைப்பு பெற்று திருச்சி மத்திய மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.குற்றவாளி மீது ஏற்கனவே தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

மேற்படி தலைமறைவு எதிரியை கைது செய்த கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவினருக்கு (Anti Rowdy Team) கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டு தெரிவித்தார்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button