பசுமைத் தாய்நாடு அறக்கட்டளை சார்பில்,திருப்பத்தூர் பெரிய ஏரிக்கரையில் 500 மரக்கன்றுகள் நடும் விழா…!
பசுமைத் தாய்நாடு அறக்கட்டளை சார்பில்,திருப்பத்தூர் பெரிய ஏரிக்கரையில் 500 மரக்கன்றுகள் நடும் விழா…!
திருப்பத்தூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான பெரிய ஏரி கரையில் இன்று பசுமைத் தாய் நாடு அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது..
நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் சத்யராஜ் அனைவரையும் வரவேற்றார்..ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியின் முதல்வர் ஜூலியா செல்வ சுந்தரி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் லட்சுமணன்,செயலாளர் ராதாகிருஷ்ணன்,மாநில ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சுப்பிரமணியம்,சமூக ஆர்வலர் ராம்குமார்,அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…வாகை,சொர்க்கம்,பாதாம், வேப்பம்,புங்கம், இலுப்பை,மகோகனி உள்ளிட்ட மரக்கன்றுகள் ஏரிக்கரையின் பகுதிகளில் நடப்பட்டது.
ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியின் தேசிய மாணவர் படையை சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்….