சமூக ஆர்வலர் விட்டல் குமார் படுகொலையை கண்டித்து நீதி கேட்கும் போராட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
சமூக ஆர்வலர் விட்டல் குமார் படுகொலையை கண்டித்து நீதி கேட்கும் போராட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… ஆர்ப்பாட்டத்திற்கு காவலர் அனுமதி மறுக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது…அதனைத் தொடர்ந்து வரும் மூன்றாம் தேதி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக பத்து ரூபாய் இயக்கத்தின் பொதுச்செயலாளர் நல்வினை விசுவராஜ் தெரிவித்தார்.போராட்டத்தில் பத்து ரூபாய் இயக்கத்தின் நிறுவனரும்,பொதுச் செயலாளரருமான நல்வினை விஸ்வராஜ்,துணைப் பொதுச் செயலர் தர்மேந்திரன்,வேலூர் மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன்,திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர்
ரூமன்,திருப்பத்தூர் சட்ட பஞ்சாயத்து இயக்க நகர செயலாளர் ராஜீவ் காந்தி மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.தொடர்ந்து விட்டல் குமாரின் இறப்புக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின்பு அனைவரும் கலந்து சென்றனர்…