திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் திம்மம்பேட்டை பகுதி சிமுகப்பட்டு,சீயோன் மலையில் உள்ள மகிமையின் சுவிசேஷ திருச்சபையில் கிறிஸ்துமஸ் விழா கோளாகளமாக கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் திம்மம்பேட்டை
பகுதி சிமுகப்பட்டு,சீயோன் மலையில் உள்ள மகிமையின் சுவிசேஷ திருச்சபையில் கிறிஸ்துமஸ் விழா கோளாகளமாக கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு சிறு பிள்ளைகளுக்கு பாட்டு போட்டி,
வசன போட்டி,பைபிள் அதிகாரம் ஒப்புவித்தல் போட்டி,
நடன போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது.விழாவினை பாஸ்டர் டேவிட் விஸ்வநாதன் தலைமையற்றார்., பாஸ்டர் மெய்யழகன், ஜெப ஊழியர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆராதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து
அலசந்தபுரம் பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வன்,சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுக்குழு உறுப்பினர்
ராஜீவ் காந்தி,
திம்மாம் பேட்டை காவலர்,
ஊர் தலைவர் பெரியோர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சபை ஊழியர் விசுவாசிகள் பொதுமக்கள் என 300 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்…