இராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி திருக்கோயில் அருகில் மூன்று தலைமுறையாக வசித்து தொழில் செய்து வரும் நரிக்குறவர்கள் வசிக்க இடம் இல்லாமல் தவிக்கும் அவல நிலை….
இராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி திருக்கோயில் அருகில் மூன்று தலைமுறையாக வசித்து தொழில் செய்து வரும் நரிக்குறவர்கள் வசிக்க இடம் இல்லாமல் தவிக்கும் அவல நிலை….
இராணிப்பேட்டை மாவட்டம் கீழ் மின்னல் கிராமம்,இரத்தினகிரி பகுதியில் பல தலைமுறையாக வசித்து தொழில் செய்து வரும் நரிக்குறவர்கள் தங்குவதற்கு வீடு இல்லாமல் அவதிப்படும் அவல நிலை உள்ளது… குறிப்பாக மழை காலங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதுகாக்க முடியாமல் திணறி வருகின்றனர்… பல முறை இடம் ஒதுக்க அரசிடம் முறையிட்டும் இதுவரை முறையான தீர்வு கிடைக்காமல் திணறும் மக்கள்… இரத்தினகிரி பகுதியில் உள்ள மூன்று ஏக்கர் அரசு புறம்போக்கு இடத்தில் தங்களுக்கு இடம் ஒதுக்கி கொடுத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும் என்று நரிக்குறவர் மக்கள் தெரிவிக்கின்றனர்…அரசு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
தலைமை செய்தியாளர்
பாலமுரளி