திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி ஊராட்சியில் கிளை நூலகத்தை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியின் கீழ் இரண்டு லட்சமும் பொதுப்பணித்துறை மூன்று லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது…..
5 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மாடப்பள்ளி கிளை நூலகத்தை திறந்து வைத்தார் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி!
திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி ஊராட்சியில் கிளை நூலகத்தை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியின் கீழ் இரண்டு லட்சமும் பொதுப்பணித்துறை மூன்று லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
இன்று 06/12/24 மாலை 4 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு நல்லதம்பி திறந்து வைத்தார்..நிகழ்ச்சியில் மாடப்பள்ளி கிளை நூலக வாசக வட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்….திருப்பத்தூர் மாவட்ட நூலகர் கிளமெண்ட், திருப்பத்தூர் மாவட்ட நூலக கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன்,திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் விஜய் அருணாசலம், ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு,ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன், திருப்பத்தூர் மாவட்ட கிளை நூலகர்கள், சமூக ஆர்வலர் ராம்குமார் முன்னிலை வகித்தனர்.
தமிழக அளவில் மிக குறுகிய காலத்தில் 100 புரவலர்களை சேர்த்த நூலகர் அன்பழகன், புரவலர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்..ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்….மாடப்பள்ளி கிளை நூலகர் அன்பழகன் நன்றி கூறினார்….