திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிளை நூலகத்தில் கன்னியாகுமரி கடலில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் ஆனதை பறைசாற்றும் விதமாக வெள்ளி விழா கொண்டாட்டம்..!
திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிளை நூலகத்தில் கன்னியாகுமரி கடலில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் ஆனதை பறைசாற்றும் விதமாக வெள்ளி விழா கொண்டாட்டம்..!
திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிளை நூலகத்தில்,கிளை நூலக வாசகர் வட்டமும், திருப்பத்தூர் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மையம் இணைந்து கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் உருவசிலை நிறுவி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் மாணவருக்கான திருக்குறள் போட்டி, நூலக உறுப்பினர் சேர்க்கை,புரவலர் சேர்க்கை என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியை திருப்பத்தூர் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மையத்தின் தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்,ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்….கிளை நூலகர் அன்பழகன் அனைவரையும் வரவேற்றார். திருப்பத்தூர் மாவட்ட நூலக அலுவலர் கிளமெண்ட்,தூய நெஞ்சக் கல்லூரி கணிதத்துறை பேராசிரியர்,மரிய சகாயராஜ்,தமிழ் துறை பேராசிரியர் சிவசந்திர குமார், இந்திய அஞ்சல் துறை ஜெயப்பிரதாஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மருத்துவர் திருப்பதி, காக்கணாம்பாளையம் ஒன்றிய கவுன்சிலர், முன்னாள் ராணுவ வீரர் தீனதயாளன் ஆதியூர்,சுகந்திசுரேஷ் பொம்மிகுப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் ஓவியர் தசரதன் மாணவர்களுக்கான பரிசு பொருட்களை வழங்கினர்.ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் மாணவர்கள் 1 முதல் 12 வகுப்பு வரையிலான பல்வேறு பிரிவுகளில் திருக்குறள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்… மாடப்பள்ளி நூலக உதவியாளர் பேரரசன் நன்றி கூறினார்.