நாகர்கோவில் மாவட்டம் அஞ்சு கிராமம் பஸ் நிலையத்தில் பரபரப்பு பேருந்து நடத்துனருக்கு திடீர் உடல்நல குறைவு…
அஞ்சு கிராமம் பஸ் நிலையத்தில் பரபரப்பு
பேருந்து நடத்துனருக்கு திடீர் உடல்நல குறைவு…
உடனடி உதவிய பேருராட்சி துணை தலைவர்
அஞ்சு கிராமம் நவ- 14 நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம் வழியே நெல்லை செட்டிகுளத்திற்கு நேற்று இரவு ஏழு மணி அளவில் மகளிர்க்கு இலவசம் பஸ் ஐம்பதுக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அஞ்சுகிராமம் டாக்டர் எம்.ஜி.ஆர் பஸ் நிலையம் வந்தது.பஸ் நடத்துனராக ஈத்தாமொழியை சேர்ந்த சோம சந்திரசேகர் வயது 54 பணியில் இருந்தார். அஞ்சுகிராமம் பஸ் நிலையத்திற்கு வந்த போது திடீர் உடல்நலக் குறைவால் கண்டக்டர் சீட்டில் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட பயணிகள் பரபரப்பு அடைந்தனர். என்ன செய்வது என தெரியாமல் திகைத்தனர். இதை அறிந்த நடத்துனர் ராஜேந்திரன், அஞ்சு கிராமம் பேரூராட்சி துணைத்தலைவர் காந்திராஜ் மற்றும் பயணிகள் அதிரடியாக கண்டக்டரை மெதுவாக இறக்கி ஆட்டோவில் ஏற்றி, லெவிஞ்சுபுரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் அஞ்சுகிராமம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடி உதவிய பேரூராட்சி துண தலைவர் காந்தி ராஜீக்கு பாராட்டு குவிகிறது