சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கரியா கோவில் நீர் தேக்கம் அருகே மூலப்பாடி செல்லும் பிரிவில் பொதுமக்கள் போராட்டம்...
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கரியா கோவில் நீர் தேக்கம் அருகே மூலப்பாடி செல்லும் பிரிவில் கரிய கோவில் நீர் தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடுவதால் மூலப்பாடி பகுதியில் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் நீண்ட தூரம் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள். அணையில் இருந்து வரும் தண்ணீர் வரும் பாதையில் நடந்து செல்லும்போது கீழே வழுக்கி விழுந்து பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து பொதுமக்கள் அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் மற்றும் ஏ.இ.கோகுல்ராஜ்,வடக்கு நாடு ஒன்றிய செயலாளர் டி.சிவராமன் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களின் குறைகளை அறிந்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சீரமைப்பு பணியினை விரைவாக முடித்துக் கொடுக்குமாறு ஏ.இ கோகுல்ராஜிடம் கோரிக்கை விடுத்தனர்… உடன் பாப்பநாயக்கன்பட்டி சேகர்,தனபால்,அழகு மூலப்பாடி லட்சுமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் காவல் ஆய்வாளர்..சாலை சீரமைப்பும் பணியில் நடைபெற்று வருகிறது.