திருப்பத்தூர் மாவட்ட ஆம்பூரில் காணாமல் போன சுமார் 11.1/5 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் உமராபாத் காவல் துறையின் அதிரடி நடவடிக்கை…
திருப்பத்தூர் மாவட்ட ஆம்பூரில் காணாமல் போன சுமார் 11.1/5 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் உமராபாத் காவல் துறையின் அதிரடி நடவடிக்கை…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த லோகநாயகி (வயது 35) 23.10.2024 அன்று காலை தனது சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டிவிட்டு சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடி சென்றுள்ளதாக புகார் பெறப்பட்டதின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் உமராபாத் காவல் ஆய்வாளர் நிர்மலா (பொறுப்பு) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொழில்நுட்ப உதவிகளுடன் CCTV கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்ததில் ஆம்பூர் சோமலாபுரம் பகுதியைச் சேர்ந்த 1. புகழ் மணி (24), 2. பர்ஜானா (23) ஆகிய இருவரும் மேற்படி நபரின் வீட்டில் இருந்த தங்க நகைகள் திருடியது தெரியவந்தது.மேலும் அவர்களிடமிருந்து சுமார் 11.1/2 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ( 28.10.2024 ) குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.