திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் இன்று (24.10.2024) மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் முக்கிய கடைவீதிகள்,வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வழிப்பறி, கவனத்தை திசை திருப்பி திருடுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க தங்களது நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும்.
போதைப்பழக்கத்திற்கு எதிரான குற்றத்தடுப்பு பற்றியும்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு பற்றியும், பெண்களுக்கான உதவி எண்-181, குழந்தைகளுக்கான உதவி எண்-1098, காவல் உதவி செயலி பற்றியும்,இணைய வழி குற்றம் (Cyber Crime Helpline No 1930), போக்குவரத்து விதிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது….