உள்ளூர் செய்திகள்மதம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள புது கிராமத்தில் அமைந்துள்ள திருவேங்கட விண்ணகப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி கோவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை…!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள புது கிராமத்தில் அமைந்துள்ள திருவேங்கட விண்ணகப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி கோவிலில் ஓணத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார  தீபாதாரணை கலசபூஜை நடைபெற்றது. அன்னதானத்தை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் துவங்கி வைத்தார். பின்பு கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் கூறும் போது,  பக்தர்கள் கோவிலுக்கு நன்கொடை வழங்குவது தனி நபரிடம் வழங்க வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகத்திடம் நன்கொடைகளை வழங்கி முறையாக ரசிது பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தனியாரிடம் நன்கொடை வழங்குவதால் முறையாக கோவிலுக்கு அந்த நன்கொடை செல்வதில்லை எனவும் கூறினார். பின்பு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கழிவறை கட்டிட  வசதி செய்து தர கோரிக்கை வைத்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி கோவிலுக்கு அருகே கழிவறை கட்டிடம் கட்டுவதற்கான பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க கூறினார்.உடன் தேரூர் பேரூர் செயலாளர் முத்து, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கவுன்சிலர் அருண்காந்த், கோவில் ஊழியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button