அரசியல்உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதி செயல்வீரர்கள் கூட்டம் 15-09-24 அன்று மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற்றது…!
நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதி செயல்வீரர்கள் கூட்டம் 15-09-24 அன்று மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் பகுதி செயலாளர் துரை தலைமையில் நடைப்பெற்றது.சிறப்பு விருந்தினராக
குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு
திமுக அரசின் நலத்திட்டங்கள் பற்றியும், இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தவும் கழக வளர்ச்சிக்கான ஆலோசனைகள் வழங்கி அலுவலகத்தில் கழக கொடியினை ஏற்றி வைத்தார். மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன்,மாநகர செயலாளர் ஆனந்த்,மாநகர அவைத்தலைவர் பன்னீர் செல்வம்,பகுதி செயலாளர் மண்டலத்தலைவர் ஜவஹர், பகுதி செயலாளர் சேக்மீரான்,
மாநகர தொழிலாளரணி அமைப்பாளர் சிதம்பரம்,மாநகர இளைஞரணி அமைப்பாளர் சி.டிசுரேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…