திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது…!
திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கான வரவேற்புரையைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் சிவகாமசுந்தரி வழங்கினார். மேலும் தலைமை ஆசிரியருக்குப் பொன்னாடை போர்த்தி தம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பட்டதாரி தமிழ் ஆசிரியர்
வெ.பாலமுருகன் ஜான் ஹோல்ட் எழுதிய ஆசிரியரின் டைரி என்ற நூலைத் தலைமை ஆசிரியருக்கு வழங்கி தம் ஆசிரியர் தின வாழ்த்துகளை கூறிக் கொண்டார். நிகழ்வின் தொடக்கமாக பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் அவ்வை வினோதினி கருத்துள்ள சினிமா பாடல்களைப் பாடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்… பத்தாம் வகுப்பு மாணவி சர்மிளா ஆசிரியர் தினம் குறித்து மிகச் சிறப்பாக பேசினார். தமிழ் ஆசிரியர் பாலமுருகன் ஆசிரியர் தின விழா குறித்த கவிதையைப் படித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராமநாதன் தன்னுடைய பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினார்…. குறிப்பாக விலங்குகளின் குரலிலும் மனிதர்கள் சிரிக்கும் பல்வேறு வகைகளைப் வெவ்வேறு குரல்களிலும் பேசி மாணவர்களையும் ஆசிரியர்களையும் மிகவும் மகிழ்ச்சிப் படுத்தினார். சிரிப்பை மறந்து விட்ட இந்தக் காலத்தில் நகைச்சுவையை மிக அழகாக தம்முடைய சிறந்த நடிப்பாலும் பேச்சாலும் வெளிப்படுத்தினார். நகைச்சுவை சார்ந்த ஆசிரியரின் சிறப்பைக் கூறும் ஒரு நல்ல கதையை மிக அழகாக கூறினார். அவருக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நூல் ஒன்றைக் கொடுத்து பாராட்டினார். சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பாரதிராஜா ஆசிரியர் தின விழா குறித்தான தம் கவிதையைப் படித்து அனைவருக்கும் தம் வாழ்த்துகளைக் கூறிக்கொண்டார்… மாணவர்களின் வாழ்த்துகளுடனும் ஆசிரியர்களின் வாழ்த்துக்களுடனும் நிகழ்வானது மிகச் சிறப்பாகவும் மகிழ்ச்சிகரமாகவும் நினைவுகளைப் பதிவு செய்யும் விதமாகவும் அமைந்தது. விழாவின் நிறைவாக நன்றியுரையைத் தமிழாசிரியர் வழங்கினார்.. மேலும் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் தினத்தின் சிறப்பினை அறிந்து கொண்டனர்…நாட்டுப்பண்ணுடன் ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாக முடிந்தது.