கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது…
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது…
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அறிக்கை…!
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை கழகத்தினருக்கு போதித்து, அவ்வழியில் செயலாற்ற அறிவுறுத்திய காஞ்சி தந்த காவியத் தலைவர்,
உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டு கொலுவீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர் மற்றும் கழகத்தினரால் அண்ணா என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 15.09.2024 ஞாயிறு காலை 09.00 மணியளவில் மேயர் மகேஷ் தலைமையில் வடசேரியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
ஆகவே கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,பேரூர்,வட்ட, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.