திருப்பத்தூர் மாவட்டம் A.K. மோட்டூர் ஊராட்சியில் மரம் நடும் விழா…
திருப்பத்தூர் மாவட்டம் ஏ.கே மோட்டூர் ஊராட்சியில் தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர் மாவட்ட வனத்துறை மற்றும் AK மோட்டூ ஊராட்சி நிர்வாகம் இணைந்து மரக்கன்று நடும் விழா நடத்தினர்…விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு மாணவர்களிடையே மரம் நடுவதின் அவசியத்தையும் எதிர்காலத்தில் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அதிக அளவு மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும் அதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.இந்த நிகழ்ச்சியில் தூய நெஞ்சக் கல்லூரியின் அருட்தந்தை சாம்சன் சண்முகம் முன்னிலை வகித்தார்.ஏ.கே மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பு.வேலு தலைமை வகித்தார். உதவி வன பாதுகாவலர் ராதாகிருஷ்ணன்,வன சரக அலுவலர் சோலைராஜன்,வனவர் வெங்கடேஷ்,வனத்துறை பணியாளர்கள்,
துணைத் தலைவர் காஞ்சனா சிவப்பிரகாசம்,ஊராட்சி செயலாளர் வசந்தி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள்,நம் மக்களின் குரல் ராதாகிருஷ்ணன்,சமூக ஆர்வலர் ராம்குமார், சுகாதார வளர்ச்சி பணிகள் அறக்கட்டளையின் இயக்குனர் முனியப்பன்,
நலவாழ்வு மையத்தின் இயக்குனர்
நளினி,
பெண்கள் மேம்பாட்டு சங்கம் அறக்கட்டளையின் இயக்குனர் பரிமளா,
சீரகம் அறக்கட்டளையின் இயக்குனர் சூசைராஜு,கல்லூரியின் பேராசிரியர்கள்,மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.