முக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 3 பழங்கால நடுகற்கள் கண்டெடுப்பு…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 3 பழங்கால நடுகற்கள் கண்டெடுப்பு..
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி,வரலாற்று ஆய்வாளர் காணிநிலம் மு.முனிசாமி வாணியம்பாடியைச் சேர்ந்த சித்த வைத்தியர் சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் வரலாற்றுச் சிறப்புமிக்க 3 நடுகற்களை கண்டெடுத்துள்ளனர்.
இது குறித்து முனைவர் க.மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வடக்குப்பட்டு என்ற கிராமத்தில் தருமராஜா- திரௌபதி அம்மன் ஆலயத்தின் கருவறைக்கு அருகில் 15 அடி உயரத்துடன் சிறிய அளவில் உள்ளது. வலது கையில் வாளை ஏந்திய கோலத்தில் காணப்படுகிறது. இந்நடுகல் வழிபாட்டில் உள்ளது. இக்கோயில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. மீன், பாம்பு உள்ளிட்ட உயிரினங்களின் சிற்பங்கள் இக்கோயிலின் மேல் கூரைகளில் உள்ளன.
இரண்டாவது நடுகல் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கி.பி 16 ஆம் நூற்றாண்டு உடன்கட்டை நடுகல்லாகும். இந்நடுகல்லை இவ்வூர் மக்கள் மலைதேவன் சிலை என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். 25 அடி அகலமும் 2.3 உயரமும் இன்னும் 2 அடி ஆழத்திற்குப் புதைந்தும் இந்நடுகல்லானது காணப்படுகிறது. இச்சிலையின் அமைப்பானது நடுகல் வீரனின் தலைமுடி வாரி முடிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டையாக அது காட்சி தருகிறது. காதுகளில் குண்டலங்கள் உள்ளன. வலது கையில் குறுவாள் ஒன்று ஏந்திய கோலத்தில் வீரன் உள்ளார். வீரனின் வலது பக்கத்தில் வீரப் பெண்மணியின் உருவம் இடம் பெற்றுள்ளது. இப்பெண் இந்நடுகல்லின் மனைவி ஆவார்.வீரன் போரில் வீர மரணம் அடைந்தவுடன் அவனுடைய மனைவியும் இறங்கி நெருப்பில் இறங்கி உயிர் விட்டிருப்பாள். கணவனோடு மனைவி உயிர் விடுதலை உடன்கட்டை ஏறுதல் எனப்படும் . மூன்றாவது நடுகல்லும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கி.பி 16 ஆம் நூற்றாண்டு நடுகல்லே ஆகும். இந்நடுகல் வாணியம்பாடிக்கு அருகே உள்ள திகுவாபாளையம் என்ற ஊரில் பிட்டாய் கவுண்டர் வட்டத்தில் பிரபு குமார் என்பவர் நிலத்தில் உள்ளது. இந்நடுகல்லின் அமைப்பானது 3 அடி உயரமும் 2.5 அகலமும் கொண்டதாக உள்ளது. நடுகல் வீரனின் இடது கையில் தண்டு போன்ற ஆயுதம் ஒன்றும் வலது கையில் நீண்ட வாள் ஒன்றைத் தரையில் ஊன்றியபடியும் நிற்கின்றார். இவ்வீரன் போரில் வீர மரணம் அடைந்ததால் அவன் மனைவி உடன்கட்டை ஏறித் தன் உயிரை விட்டுள்ளார். உடன்கட்டை ஏறிதற்கான அடையாளமாக வலது புறமாக கள்குடம் ஒன்றைத் தாங்கியுள்ளார்.இது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நடுகற்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button