விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் வடசெரியில் விநாயகர் சிலை விற்பனை…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி சாலை ஓரத்தில் வடநாட்டு வியாபாரிகள் ரசாயன கலவை கலக்கப்படாத கற்பக விநாயகர், சக்தி விநாயகர்,நர்த்தகி விநாயகர், திருமூர்த்தி விநாயகர்,பஞ்சமூர்த்தி விநாயகர்,ராஜ விநாயகர் என முப்பதுக்கும் மேற்பட்ட வகைகளில் விநாயகர் சிலைகள் விற்பனை செய்துவருகின்றனர்.இங்கு அரை அடி முதல் 3 அடி வரை உள்ள விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. விநாயகர் சிலைகள் ₹.150 முதல் ₹.5000 வரை விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன.இதனை பொதுமக்களும், ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கின்றனர்.ஆனால் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு விநாயகர் சிலைகளில் விலை அதிகரித்துள்ளது.அதன் மூலப்பொருட்கள் மற்றும் வண்ணம் பூசும் பணியின் ஊதிய உயர்வு காரணமாக விலை உயர்ந்துள்ளதாகவும் இந்த சிலைகள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.