திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன கம்மியம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயிகளுக்கு பாரம்பரிய இலவச விதை பகிர்தல் நிகழ்வு..!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன கம்மியம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயிகளுக்கு பாரம்பரிய இலவச விதை பகிர்தல் நிகழ்வு..
!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன கம்மியம்பட்டு கிராமம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சாம்ராஜின் இயற்கை விவசாய பண்ணையில் இயற்கை விவசாயிகளுக்கு பாரம்பரிய சிறுதானிய விதை பகிர்தல் மூலம் விதைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஜோலார்பேட்டை இயற்கை அங்காடி அன்பழகன் அனைவரையும் வரவேற்றார். சமூக ஆர்வலர்கள் முத்தமிழ் வேந்தன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு சார்பாக கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நூற்றுக்கணக்கான விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பு உழுதுஉண் சுந்தர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தேவையான விதைகளை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்ட இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு சார்பாக விவசாயிகள் விஸ்வநாதன், தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு மாதனூர் ஒன்றிய தலைவர் லீலா வினோதன், சுப்பிரமணி, குணசேகர், அச்சுதன், இமயவரம்பன், உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாரம்பரிய சிறுதானிய உணவும், கருப்பு கவுனி பாயாசமும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியின் நிறைவாக விவசாயி மாதையன் நன்றி கூறினார்….